பாணந்துறை - ஹொரனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் 80 நபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொவிட்-19 க்கான நேர்மறையான முடிவுகள் நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.