(எம்.எப்.எம்.பஸீர்)

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

சாட்சிகளை உருவாக்கினார் எனும் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டிருந்த நிலையில், கொவிட் தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச். எனப்படும் அங்கொடை தொற்று நோய்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு  அவர் மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 56 ஆவது சிகிச்சையறையில் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவருக்கு, எஞ்சியோகிராம் எனப்படும் இரத்த நாளங்களுடன் தொடர்புபட்ட எக்ஸ்ரே கதிர்வீச்சு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள்  திணைக்களத்தின் தகவல்கள் வீரகேசரிக்கு வெளிப்படுத்தின.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மஹர சிறையிலிருந்து அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், தற்போது எஞ்சியோகிராம் பரிசோதனைகளை மையப்படுத்தி இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

அங்கு அப்பரிசோதனையின் முடிவிலேயே, அவரை மீள அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றுவதா இல்லையா என முடிவெடுக்கபப்டும் என  தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.