நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் போதைப் பொருள் வழக்குகளில் பிணை வழங்குவது பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அமைதியைக் கெடுத்துவிடும் என கூறி, போதைப் பொருள் வழக்கு ஒன்றின் பிணை மனு மீதான விசாரணையின்போது, நீதிபதி இளஞ்செழியன் பிணை வழங்க மறுத்து வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2 ஆம் திகதி இன்று ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர் இதனைக் கூறியுள்ளார்.