வவுனியாவில் கொரோனா தனிமைப்படுத்தலுக்குட்பட்ட குடும்பங்களிற்கு அரசினால் எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படாமையினால் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த வாரம் வவுனியா திருவநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த குடும்பத்துடன் தொடர்புகளை பேணிய பலர் திருநாவற்குளம் பகுதியில் தனிமைப்படுத்தலிற்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு 6 நாட்கள் கடக்கின்ற நிலையிலும், அவர்களுக்கு எந்த விதமான நிவாரண உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை.
இதேபோல் கற்குழியில் கொரோனா தொற்றிற்குள்ளான மாணவியுடன் தொடர்புகளை பேணியதாக பூந்தோடம் ஶ்ரீநகர் கிராமத்திலும் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களிற்கான எந்தவித நிவாரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை.
கூலித்தொழிலை நம்பி இருக்கும் குறித்த குடும்பங்கள் தனிமைப்படுத்தல் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களிற்கான உதவிகளை அதிகாரிகள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM