போரில் காயமடைந்த கடற்படை வீரர்கள் பயன்படுத்துவதற்காக இரு விடுமுறை பங்களாக்களை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தார்.

குறித்த இரு விடுமுறை பங்களாக்களும் தியத்தலாவையில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி யமுனா விஜேகுணவர்தன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதற்கான கட்டுமானப் பணிகள் குறுகியகாலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்  இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு 21 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் கடற்படை உயர் அதிகாரிகள், ரியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, மேற்கு பகுதி கடற்படைத் தளபதி ரியர் அடமிரல் ஜயந்த டி சில்வா மற்றும் இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.