அமெரிக்க உணவகங்களில் மலைப்பாம்பை உணவாக அறிமுகம் செய்யும் முயற்சியில் அமெரிக்க அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.
குறிப்பாக, புளோரிடா அதிகாரிகள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். காரணம், மலைப்பாம்புகள் மற்ற வன விலங்குகளை பெருமளவில் உண்ணுவதால் இயற்கை சமநிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது.
ஆகவே, இந்த நிலைமையை சமாளிப்பதற்காக, அமெரிக்க உணவகங்களில் மலைப்பாம்பை ஒரு உணவாக அறிமுகம் செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.
ஆனால், மலைப்பாம்புகளின் இறைச்சியில் பாதரசம் இருக்கும் என்பதால், அது எந்த அளவுக்கு இருக்கும், மனிதர்கள் அதை சாப்பிட்டால் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுமா என்பதைக் கண்டறியும் ஆய்வில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.
அதற்காக, 6,000 மலைப்பாம்புகள் ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ளன.
ஏற்கனவே சில இடங்களில் மலைப்பாம்பு மாமிசம் பயன்பாட்டில் உள்ளது. மக்கள் ஒரு பவுண்டு மலைப்பாம்பு மாமிசத்துக்காக ரூபாய் 3,698 (50 டொலர்கள்) வரை கொடுக்க தயாராக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM