மஹிந்த பாதயாத்திரையின் போது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக கைதான இருவரை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பாதயாத்திரையின் போது பேராதெனியவில் உள்ள ஹெட்டம்பே விகாரைக்கு முன்னால் உள்ள வீதியால் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி மீது பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்கள் தாக்குதல் மேற்கொண்டனர்.

குறித்த அம்பியூலன்ஸ் வண்டியின் கண்ணாடி உடைக்கப்பட்டதுடன் வண்டியினுள் இருந்த நோயாளி மற்றும் சாரதியை பேரணியிலீடுபட்டோர் அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை அரசுக்கு எதிராகவும் நாட்டு மக்களை பாதுகாக்கவும் முன்னெடுக்கப்பட்ட குறித்த பாதயாத்திரையின் போது இவ்வாறான சம்பவம் ஏற்பட்டுள்ளமையானது மிகவும் அருவருக்கத்தக்க செயலாக காணப்படுகின்றது.