யாழ். மருதனார்மடம் கொத்தணியில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று 

Published By: Digital Desk 4

21 Dec, 2020 | 10:23 PM
image

யாழ்.மருதனார்மடம் கொரேனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று ( 21) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் இவர்களுக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 11ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93 ஆக உயர்வடைந்துள்ளது.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மருதனார்மடம் பொதுச் சந்தைக்குச் சென்று வந்துள்ளார். சுயதனிமைப்படுத்தப்பட்ட அவரிடம் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரும் மருதனார்மடம் சந்தைக்கு சென்று வந்தவர்.

அத்துடன், மருதனார்மடம் சந்தை தொற்றாளருடன் நேரடித் தொடர்புடைய உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட இணுவிலைச் சேர்ந்தவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட மூவரும் கடந்த ஒரு வாரத்துக்கு  மேலாக குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட முதலாவது கொவிட் -19 தொற்று நோய்க் கொத்தணி இதுவாகும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 383 பேரின் பி.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 3 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. ஏனையோருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31