எதிரணியினரால் மேற்கொள்ளப்பட்ட பாதயாத்திரை ஐக்கிய தேசியக் கட்சியை எவ்விதத்திலும் பாதிக்காது என அமைச்சரவை  பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க  தெரிவித்தார். 

 அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படட பாதயாத்திரைக்கு ஒரு இலட்சம் மக்களை ஒன்று திரட்டுவோம் என்றார்கள். ஆனால் மூவாயிரம் பேரே காணப்பட்டனர்.

இலட்ச கணக்கான மக்கள் பாதயாத்திரையில் ஈடுபடுவதால் பெரிய மைதானம் ஒன்றை பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் கேட்டனர். 

இதனையடுத்து கெம்பல் மைதானத்தை வழங்க அரசாங்கம் முடிவு செய்தது. ஆனால் அந்த மைதானத்தை நிரப்பும் அளவுக்கு மக்கள் கூட்டத்தை கூட்டமுடியாமல் போனமையால் மூவாயிரம் பேரை உள்ளடக்க கூடிய லிப்டன் சுற்று வட்டத்தில் கூட்டத்தை நடத்தினர்.

இவர்களின் பேரணியால் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் எவ்விதத்திலும் அழுத்தம் ஏற்படாது.