(செ.தேன்மொழி)

எல்பிட்டி பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

எல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தலகஸ்பே பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குழல் 12 ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.