ஆஸி அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக லெஹ்மன்  2019 வரை நீடிப்பு

Published By: Ponmalar

02 Aug, 2016 | 02:31 PM
image

அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர்   டெரன் லெஹ்மன் குறித்த பதவியில் 2019 ஆண்டுவரை நீடிப்பார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெறவிருக்கும் உலகக்கிண்ணம் மற்றும் ஏஷஸ் தொடருக்கும் டெரன் லெஹ்மன் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

46 வயதான டெரன் லெஹ்மன் 2013 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

அவுஸ்திரேலிய அணி 2013 ஆண்டு ஏஷஸ் தொடரை 3-0 என்ற நிலையில் இழந்திருந்ததன்  பின்னர் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய டெரன் லெஹ்மன் அவுஸ்திரேலிய அணியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.

இவரின் வருகைக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணி தென்னாபிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து நியுஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளுடன் மோதி தொடரை வென்றுள்ளதுடன், 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தையும் கைப்பற்றியுள்ளது.

அவுஸ்திரேலிய அணி  தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிக்கட் வீரர்களை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது...

2024-06-24 15:00:06
news-image

19 வயதுக்குட்பட்ட இலங்கை இளையோர் லீக்...

2024-06-24 15:20:43
news-image

இணை வரவேற்பு நாடான மேற்கிந்தியத் தீவுகளை...

2024-06-24 11:10:52
news-image

அமெரிக்காவை நையப்புடைத்து வெற்றியீட்டிய இங்கிலாந்து முதலாவது...

2024-06-24 09:21:09
news-image

ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு...

2024-06-23 18:52:47
news-image

பெட் கமின்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் ஹெட்-ட்ரிக்;...

2024-06-23 10:11:07
news-image

பங்களாதேஷை வீழ்த்தி உலகக் கிண்ண அரை...

2024-06-23 05:39:40
news-image

ரி20 உலகக் கிண்ண அரை இறுதிச்...

2024-06-22 19:31:12
news-image

விதிகளை நடைமுறைப்படுத்துவதில் ஐ.சி.சி. இரட்டை வேடம்...

2024-06-22 16:33:52
news-image

கண்டி ஒலிம்பிக் தின கொண்டாட்டத்தில் ஆயிரத்துக்கும்...

2024-06-22 16:16:27
news-image

சேஸ் பந்துவீச்சிலும் ஹோப் துடுப்பாட்டத்திலும் அசத்தல்;...

2024-06-22 11:11:48
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடிப்புச் செய்த இலங்கை...

2024-06-22 10:19:13