முப்படையினருக்கு உரித்தான வெடிப்பொருட்கள் மற்றும் வர்த்தக வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்காக மக்கள் நடமாட்டம் குறைந்த பிரதேசத்தில் ஆயுதக் களஞ்சியசாலை தொகுதியொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதனடிப்படையில் அநுராதபுரம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்த ஓயாமடுவ பிரதேசத்தில் சர்வதேச தரத்திலான குறித்த களஞ்சியசாலை தொகுதியினை அமைப்பதற்கு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.