முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் 41 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் 1,652 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பொலிஸார், சிவில் உடைகளில் கடமையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்களை குறைக்கவும், கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பொது மக்கள் உரிய முறையில் பின்பற்றுகின்றார்களா என்பதை கண்டறிவதற்காக சிவில் உடைகளில் பொலிசார் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.