நாட்டுக்கு வரவிருக்கும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

Published By: Digital Desk 4

20 Dec, 2020 | 09:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

விமான நிலையம் எதிர்வரும் 26 ஆம் திகதி திறந்த  பின்னர் வெளிநாடுகளில் உள்ள  இலங்கையர்கள் வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இனி நாட்டிற்கு வருகைத் தர முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார். 

மறு அறிவித்தல் வரை பயணிகள் விமான சேவைகள் நிறுத்தம்! | Virakesari.lk

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்த காரணத்தினால்  கடந்த மார்ச் மாதம் முதல் விமான நிலையங்கள் மூடப்பட்டன. வெளிநாடுகளில் நெருக்கடிகக்குள்ளான இலங்கையர்கள், வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெற்றே, நாட்டிற்கு இதுவரை அழைத்து வரப்பட்டனர். 

இந்த நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் வழமை போன்று நாட்டிற்கு வருவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது. எனினும், சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் கடைபிடிக்கப்படும் .

நாட்டுக்குள் வரும் அனைவரும் பி்.சி.ஆர் பரிசோதனையினை முன்னெடுக்க வேண்டும். விமான நிலையத்தில் 3500 பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு நாளைக்கு விமான நிலையத்தில் சுமார் 3500 பி.சி. ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கான சுகாதார வழிமுறைகள் தொடர்பில் உரிய தரப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04