பௌத்தர்கள் எனக் கூறும் அடிப்படைவாதிகள் முஸ்லிம்களை பழிவாங்குவது சிறந்ததல்ல -  சந்திரிகா

Published By: T Yuwaraj

20 Dec, 2020 | 09:47 PM
image

(எம்.மனோசித்ரா)

முஸ்லிம் மக்களின் மீது காணப்படும் அரசியல் பழிவாங்கல் நோக்கத்திற்காக , நாம் பௌத்தர்கள் எனக் கூறும் அடிப்படைவாதிகளின் முஸ்லிம்கள் மீதுள்ள வெறுப்பிற்காக அவர்களை பழிவாங்குவது சிறந்ததல்ல. 

எனவே கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசா விவகாரத்தில் சிறந்த தீர்மானமொன்றை எடுக்குமாறு அதிகாரத்திலுள்ளவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.  

இன்று ஞாயிற்றுக்கிழமை காணொளியொன்றை வெளியிட்டு இவ்விடயம் தொடர்பில் வலியுறுத்தியிருக்கும் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அதில் மேலும் கூறுகையில்,

நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எவ்வித அடிப்படையுமின்றி தகனம் செய்யப்படுகின்றமை தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதன் உண்மை தன்மை தொடர்பில் அறிந்து கொள்வதற்காகவே நான் இது வரையில் இவ்விடயம் குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை.

அதற்கமைய உள்நாட்டு மற்றும் சர்வதேச விசேட வைத்தியர்களுடன் இவ்விடயம் பற்றி ஆலோசித்ததன் பின்னர் தற்போது இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகின்றேன்.

இலங்கையில் எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் அடிப்படையற்றது. காரணம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் பெட்டி இன்றி நிலத்தில் புகைப்பட்டாலும் மண் அல்லது நீர் மூலம் வைரஸ் மீண்டும் பரவ எவ்வித வாய்ப்பும் இல்லை என்று விஞ்ஞானபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் முக்கிய நாடுகளில் ஆய்வு செய்யப்பட்டு இந்த விடயம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் அவர்களது நம்பிக்கை நாட்டில் சிதைக்கப்பட்டுள்ளது. அவர்களது நம்பிக்கைக்கு ஏற்பட வாழ்வதற்கும் , இறுதி சடங்குகளை செய்வதற்கும் அவர்களுக்கு உரிமையிருக்கிறது.

அவ்வாறிருக்கையில் ஏன் அந்த மக்களின் ஜனாசாக்களை பலவந்தமாக தகனம் செய்கின்றார்கள் ? அரசாங்கம் சரியான வகையில் விஞ்ஞானபூர்வமாக இதற்காக தீர்வொன்றை எடுக்க வேண்டும்.

கங்கையில் நீரைக் கொட்டுவதால் இந்த நோயை குணப்படுத்த முடியாது. விஞ்ஞானபூர்வமாகவே இதனை குணப்படுத்த முடியும். ஒரு புறம் முஸ்லிம் மக்களின் மனித உரிமைகளை நாம் மீறுகின்றோம்.

மறுபுறம் இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். எந்தவொரு மனிதனுக்கும் அவன் பின்பற்றும் மதமே அவனது வாழ்வில் பிரதானமாக தாக்கம் செலுத்துகிறது. எனவே இவ்வாறு மத நம்பிக்கையை மீறுவது நியாயமற்றதாகும்.

சர்வதே ரீதியிலும் உள்நாட்டிலுமுள்ள விசேட வைத்தியர்களின் நிலைப்பாடுகளைப் பெற்று சரியான வகையில் செயற்படுமாறு அதிகாரத்திலுள்ளவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

மாறாக முஸ்லிம் மக்களின் மீது காணப்படும் அரசியல் பழிவாங்கல் நோக்கத்திற்காக , நாம் பௌத்தர்கள் எனக் கூறும் அடிப்படைவாதிகளின் முஸ்லிம்கள் மீதுள்ள வெறுப்பிற்காக அவர்களை பழிவாங்குவது சிறந்ததல்ல. எனவே சிறந்த தீர்மானமொன்றை எடுக்குமாறு நான் மீண்டும் மீண்டும் கோருகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற...

2023-03-31 17:33:17
news-image

கடும் வெப்பமான காலநிலை : அதிகம்...

2023-03-31 16:50:00
news-image

மிரிஹானவுக்கு அழைக்கப்படும் 3,000 பாதுகாப்பு தரப்பினர்!

2023-03-31 16:52:44
news-image

மஹரகம கபூரிய்யா மத்ரஸாவின் சொத்துக்களை விற்க...

2023-03-31 16:42:54
news-image

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை...

2023-03-31 16:29:30
news-image

பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் கூட்டு...

2023-03-31 16:15:25
news-image

மாணவர் பஸ் சேவை,முச்சக்கர வண்டி கட்டணம்...

2023-03-31 16:09:31
news-image

டயானா கமகேவின் மனு தொடர்பில் நீதிமன்றின்...

2023-03-31 16:56:00
news-image

நீர்கொழும்பு, கட்டானை பகுதியில் ஆடை தொழிற்சாலையின்...

2023-03-31 16:33:45
news-image

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப...

2023-03-31 14:45:33
news-image

வைத்தியர்கள் இன்மையால் அநுராதபுரம், முல்லைத்தீவு வைத்தியசாலைகளின்...

2023-03-31 14:06:26
news-image

கொலன்னாவையில் ஜீப்பை சுற்றிவளைத்த மக்கள் :...

2023-03-31 13:58:21