(செ. தேன்மொழி)

முந்தல் - சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட 1900 கிலோ கிராம் மஞ்சள் தொகையை கடற்படையானர் கைப்பற்றியுள்ளனர்.

முந்தல் - சின்னப்பாடு கடற்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே அந்த மஞ்சள்தொகை கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாகவும்,சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து எடுத்துவரப்பட்ட மஞ்சள் தொகையை சந்தேக நபர்கள் 59 உரைப்பைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிலுந்துள்ளதுடன். அவற்றுள் நீர் உட்புகாத வகையில்  அது பொலித்தீன் பைகளால் மேலும் பாதுகாப்பான முறையில் பொதிச் செய்து வைத்திருந்துள்ளனர்.

இந்த மஞ்சள் தொகை 110 இலட்சம் ரூபாவையும் விட அதிக பெருமதியுடையவை என்றும் கருதப்படுகின்றது. மஞ்சள் தொகையை சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவந்த நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த மஞ்சள் தொகையை மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையினர் சுங்க திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.