கெரவலப்பிட்டி தொழில்துறை பேட்டையின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

Published By: Digital Desk 4

20 Dec, 2020 | 05:50 PM
image

(எம்.மனோசித்ரா)

முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அதிவேக நெடுஞ்சாலைக்கான நுழைவு சாலையாக விளங்கும் கெரவலபிட்டி தொழில்துறை பேட்டை சாலையின் மேம்பாட்டு பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கிராமப்புற சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது : 

2.2 கி.மீ கெரவலபிட்டி தொழில்துறை பேட்டை நான்கு வழி சாலைகள்   இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படும்.  முதல் கட்டத்தின் 0.5 கி.மீ. 133 மில்லியன் ரூபாய் செலவிலும், இரண்டாம் கட்டத்தின் 1.7 கி.மீ 300 மில்லியன் ரூபாய் செலவிலும் அபிவிருத்தி செய்யப்படும். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலிலும், கொழும்பு துறைமுகத்திற்கான அதிவேக நெடுஞ்சாலையிலும் அமைந்துள்ள இந்த தொழில்துறை பூங்கா சாலை மிகவும் கவர்ச்சிகரமான பகுதியாக உருவாக்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் நாட்டை கட்டியெழுப்பும் 'செழிப்பு பார்வை'  தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 100,000 கி.மீ. கிராமப்புற சாலைகள் அபிவிருத்திக்கான தேசிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகிறது. இவ் அபிவிருத்திகள் ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களின் படி செயல்படுத்தப்படும். 

உட்கட்டமைப்பு மேம்பாடு என்பது உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அரசாங்கத்தின் ஒரு பங்காகும். நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக பங்கு வகிக்கும் பல தொழில்கள் இந்த சாலையில் அமைந்துள்ளதால் இந்த சாலையின் மேம்பாட்டு பணிகள் விரைவில் நிறைவடையும் என்று கிராமப்புற சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா நிகழ்வின் போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலி மாவட்ட அரசாங்க அதிபர் பதவிக்கு...

2026-01-20 18:30:07
news-image

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள தேசிய கல்வி...

2026-01-20 18:19:13
news-image

இராஜகிரியவில் 300 வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை...

2026-01-20 17:52:25
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2026-01-20 16:27:36
news-image

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை...

2026-01-20 17:29:24
news-image

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்...

2026-01-20 17:30:24
news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11