கொரோனா வைரஸ் பரவல் நிலைமையால் வீட்டிலிந்து பணியாற்றும் முறையால் எதிர்கால தொழில்கள் எவ்வாறு அமையப்போகின்றன என்பதைப் பற்றி நிறுவனங்களை சிந்திக்க வழிவகுத்துள்ளதாக டாட்டா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்தார்

ஃபிக்சி வணிக குழுமத்தின் 93ஆவது வருடாந்த அமர்வில் எழுச்சியூட்டும் இந்தியா ஒரு வணிகத்தலைவரின் பார்வை என்ற தொனிப்பொருளில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தொழில்நுட்பத்தின் மீதான அதீத நாட்டமானது கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தினையும் சாதகமானதொரு மனநிலையில் பார்க்கச் செய்துள்ளது. இதன் காரணமாக 2020கள் இந்தியாவுக்கே சொந்தமானது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை மேலும் விளக்கிச் சொல்வதானால், டிஜிட்டல் தரவுகளின் மேம்பாடு மற்றும் அமெரிக்கா மீதான சீனாவின் பிணைப்பறுத்தல் போன்ற சுய ஐயமற்ற போக்கானது இந்த நம்பிக்கையை பலப்படுத்துவதாக உள்ளது.

இந்த விடயங்களால் அனைத்து வழிகளிலும் இந்தியாவுக்கு மிகச்சிறந்த பரந்தளவிலான வாய்ப்புக்கள் இருப்பதை காணமுடிகின்றது. எமது மொத்த உள்ளுர் உற்பத்தி துறையை வளர்த்தெடுப்பதில் அடிக்கடி கடினமான நிலைமைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எப்போதும், சக்தி, தளபாடங்கள் மற்றும் தொழிலாளர் தொடர்பான விடயங்களையே கோடிட்டுக் காட்டுகிறோம். அதிக வட்டி வீதங்களையும் அளவுக்கு அதிகமான ஊக்குவிப்புக்களை முறைப்படுத்துவதையும் இடையீடுகளையும் காண முடிகின்றது.

எதிர்காலத்தில் இவ்விதமான விடயங்களை கடந்து கைத்தொழில்களை ஆரம்பிக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் செயற்பட ஆரம்பித்தால் புதிய உலக ஒழுங்கில் திருகாணியாக மாற முடியும். திறமை மீது அக்கறை காட்டப்படும் அதேநேரம் தரவுகள் மற்றும் இணையத்தொழில் நுட்பம்  ஆகியவi புதிய முறைப்படுத்தல் அளவு கோலாக மாற வேண்டும். கைத்தொழிலுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே கூட்டுப்பங்களிப்பு காணப்படுகின்றது.

எனவே கைத்தொழில் துறை திடமாக இருப்பதுடன் அனைத்து திட்டங்களையும் ஒரு கூர்ந்து நோக்குவதோடு கணிக்க வேண்டும். இந்தப் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் உதவியளிக்க வேண்டும். இதன் ஊடாக புதிய ஒழுங்கினை உடைய உலகத்திற்கான தனது பங்களிப்பினை வழங்குவதற்கு இந்தியா தயாராக முடியும்.

இந்தியாவின் முதலாவது சாரம் டிஜிட்டலாகவும் இரண்டாவது சாரம் உலகளாவிய கொத்துச் சரங்களை அணுகுதல், மூன்றாவது சாரம் சூழல் விருத்தி திறன் ஆகியன காணப்படும். இதனைவிடவும் நகர்கைக்கான சக்தி, செயற்றிறன், சூரிய சக்தி பயன்பாடு, உணவுச்சங்கிலி விநியோகம் ஆகியன உள்ளன. கொரோனா வைரஸ் பரவலிலிருந்து விடுபடுகின்ற போது இந்த விடயங்களில் அதிக அக்கறை செலுத்த வேண்டி உள்ளது என்றார்.