ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அமைந்துள்ள மிகப்பெரிய அமெரிக்க விமானத் தளமானது சனிக்கிழமை அதிகாலை ராக்கெட் தாக்குதல்களினால் குறிவைக்கப்பட்டுள்ளது.

ஐந்து ராக்கெட் தாக்குதல்களை எதிர்கொண்ட குறித்த விமானத் தளத்திற்கு எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எந்தவொரு குழுவும் இந்த தாக்குதலுக்கு உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஜிஹாதி இஸ்லாமிய அரசு குழு முன்பு ஏப்ரல் மாதத்தில் இதேபோன்ற ராக்கெட் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

பெப்ரவரியில் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க - தலிபான் ஒப்பந்தத்தின் கீழ், ஆப்கானிஸ்தானில் சர்வதேச சக்திகளை குறிவைக்க வேண்டாம் என்று தலிபான் ஒப்புக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.