பிரிட்டனில் மில்லியன் கணக்கான மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள்

Published By: Vishnu

20 Dec, 2020 | 09:27 AM
image

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் மீது கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான போராட்டங்களை பிரிட்டன் முன்னெடுத்து வரும் நிலையில், கிறிஸ்மஸ் மீதான கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்களையும் பெருமளவில் மாற்றியமைத்துள்ளார்.

இது தொடர்பில் சனிக்கிழமையன்று ஒரு செய்தியாளர் மாநாட்டில் பேசிய அவர், நாங்கள் திட்டமிட்டபடி கிறிஸ்மஸைத் தொடர முடியாது என்று நான் உங்களுக்கு கூற வேண்டும் என்று தெரிவித்ததுடன், அதற்கான மாற்றுவழிகள் என்னிடம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

புதிய கட்டுப்பாடுகளின் கீழ் தொழில் போன்ற அத்தியாவசிய காரணங்களைத் தவிர்த்து மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியிருக்கும்.

மேலும் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை மூடப்படும், அதே போல் உட்புற ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு, சமூக கலவையானது வெளிப்புற இடத்தில் ஒருவரை சந்திப்பதற்கு மட்டுப்படுத்தப்படும்.

கிறிஸ்மஸுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு மூன்றாவது முடக்கல் நிலை அவசியமில்லை என்று தான் நம்புவதாக ஜோன்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி பிரிட்டனில் 2,010,077 கொரோனா நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 67,177 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35