எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசியல்வாதிகளின் குறைகளால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும், மக்களின் குறைகளுக்குப் பதிலாக மக்களுக்கு ஆறுதல் அளிக்க அரசியல்வாதிகள் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தற்பேதைய சூழலுக்கு ஏற்றால் போல் அரசியல் வாதிகள் பணியாற்ற வேண்டும் என்றும் இன்று எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான பொருளாதார புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார பூகம்பத்தைப் புரிந்து கொள்ள முடியுமாக இருக்கிறது. இன்று சகல மக்களும் இதை அறிந்தவர்களாக இருக்கின்றனர். அந்த புள்ளிவிவரங்களை முன்வைக்க அரசாங்கம் வேண்டும் என்றே பின்வாங்கியது.வரவு செலவுத் திட்டம் நிறைவேறும் இறுதி தருவாய் வரை இதைப் பிற்படுத்தினர்.

இரண்டாவது காலாண்டில் 16.3 சதவீத எதிர்மறை வளர்ச்சி விகிதத்துடன், நம் நாடு பெரும் பொருளாதார இருளில் மூழ்கியுள்ளது.நாட்டிற்கு சுமையில்லாது நல்ல முறையில் வாழ்வாதாரங்களை மேற்கொண்டிருந்த மக்கள் இன்று சிறு சிறு தொழில்களுக்காக வீதியோரங்களுக்கு இறங்கி கஷ்டப்பட்ட வன்னமுள்ளனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால் மா கொள்வனவு செய்து கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குடும்ப உறுப்பினர்களால் நாளாந்த அடிப்படை தேவைகளைக் கூட சரியாக பூர்த்தி செய்ய முடியாத நிலையிலுள்ளனர்.இந்த பிரச்சினைக்களுக்கு தற்போதைய அரசாங்கத்திடம் பதில்களும்  இல்லை தீர்வுகளும் இல்லை.

அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகத்தின் பலவீனங்களால் நாட்டின் மக்கள் இன்று கடுமையான பேரழிவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.மக்களின் பசியும் வருத்தமும் வளர்ந்து வருவது மட்டுமல்லாமல், கொவிட் 19 ஆல்  ஒரு புதிய வறுமைப் பிரிவினர் பகுதி நாட்டில் உருவாக்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினரான நாங்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்பவும், இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லவும் எங்களிடம் திட்டம் உள்ளது.மக்களின் பிரச்சினைகளை உணர்திறன் மற்றும் மனிதநேயத்தை மனதில் கொண்டு பார்க்கும் திறன் எங்களிடம் உள்ளது.

மனிதகுலத்திற்கு முதலிடம் கொடுக்கும் திறன் எமக்கு இருக்கிறது.

ஒரு நாட்டை ஆளுவதில் வெளிப்படைத் தன்மையும், பேரழிவு காலங்களில் பல் பக்க ரீதியாக அரவனைக்கும் தன்மையும் இருக்க வேண்டும்.

மக்களின் பசி குறித்து சிந்திக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.  அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி சிந்தியுங்கள்.  அவர்களின் துன்பத்தை நினைத்துப் பாருங்கள்.  அவர்களுடன் அரவனைப்பவர்களாக இருங்கள்.

இன்று நாட்டுக்குத் தேவைப்படுவது ஒரு இதயம் மற்றும் மனசாட்சி இருக்கும் ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்தப்படுத்தும் சகாப்தம். அதுதான் எங்கள் கொள்கை. அதற்கு நாங்கள் உழைக்க கடமைப்பட்டுள்ளோம்.

சட்டவிரோத, பொருத்தமற்ற மற்றும் நட்பு ரீதியான நட்பு பொருளாதார அமைப்புகள் மூலம் நம் நாடு இன்று இந்த கட்டத்தை எட்டியுள்ளது.

அதனால்தான் நம் நாடு எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எதிர்கொண்டது.

அனைத்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆட்சியாளர்கள் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும்,  தியாகங்களைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அரசியல்வாதிகளின் குறைகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் கேட்கிறோம்.ஆட்சியில் இருந்தாலும் மக்களை கவனிப்பதில் குறைவான கரிசனையே காட்டுகின்றனர்.பதவிகள் கிடைக்கப் பெறுவது போல் அரசியல்வாதிகளின் குறைபாடுகளை ஊடகங்கள் வாயிலாக கேட்க முடியுமாக இருக்கிறது.

இன்று அரசியல்வாதிகளை பலப்படுபடுத்துவதை விட மக்களைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு பலம் கொடுக்க வேண்டும். அரசியல்வாதிகளின் பெருபகாரங்கள் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.மக்களுக்காக அர்பணிக்கும் அரசியல்வாதிகளின் தேவையைத் தான் இன்றைய யுகம் வேண்டி நிற்கிறது.