பொதுச்சந்தை பூட்டுவது தொடர்பான மாறி மாறி கிடைத்த அறிவிப்புக்களில் கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் அசௌகரியங்களை இன்று எதிர்கொண்டனர்.
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளும் பூட்டப்படும் எனும் அறிவித்தல் வெளியான நிலையில் இன்று கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் இடையில் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை மரக்கறி மற்றும் மீன் சந்தைகளை பூட்டுமாறும், ஏனைய வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று இயங்கும் எனவும் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏனைய வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
சில மணிநேரங்கள் அனைத்து வர்த்தக நிலையங்களையும் பூட்டுமாறு கரைச்சி பிரதேச சபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மாறி மாறி கிடைத்த அறிவித்தல்களால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்ட சந்தை வர்த்தகர்கள் முழுமையாக வர்த்தக செயற்பாடுகளிலிருந்து வெளியேறினர்.
ஆயினும் மரக்கறி, மீன் உள்ளிட்டவை வீதியோரங்களில் வைத்த விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சந்தையின் உட்பகுதியில் உள்ள பல்பொருள் வாணிபம், ஆடை விற்பனை நிலையம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தை வளாகம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வர்த்தக செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்று வரும் நிலையில் குறித்த வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

எதிர்வரும் நாட்கள் பண்டிகைக்காலம் என்பதால் வர்த்தக செயற்பாடுகளில் தமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM