உத்திர பிரதேச மாநிலத்தில் இளம் தம்பதியினர் இருந்த ஹோட்டல் அறையில் சிறுத்தை புகுந்ததால், அந்த ஹோட்டலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

உத்திர பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த இளம் தம்பதியினர் நைனிட்டால் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர்.  

அறைக்குள் அந்த தம்பதியர் தனிமையில் இருந்தபோது சிறுத்தை ஒன்று ஹோட்டலின் கண்ணாடி கதவை வழியே உள்ளே வந்து, குளியலறைக்குள் புகுந்து அவர்களை இரத்தவெறியுடன் பார்த்து கொண்டிருப்பதை அவர்கள் கவனித்து விட்டனர்.

மெதுவாக நடந்து சென்று சிறுத்தை சற்று அசந்த நேரத்தில் குளியலறை கதவை தாழிட்டுவிட்டு ஹோட்டல் நிர்வாகத்துக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் துப்பாக்கி மற்றும் கூண்டுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மயக்க ஊசியால் சுட்டு சிறுத்தையை பிடிக்க முயன்றனர். 

ஆனால், சிறுத்தை அவர்களிடம் பிடிபடாமல் அருகாமையில் உள்ள காட்டுக்குள் பாய்ந்து மறைந்துவிட்டது.