ஜப்பானில் ஏற்பட்ட பலத்த பனிப் பொழிவினால் ஒரே இரவில் நெடுஞ்சாலையில் சிக்கித் தவித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகங்களை மீட்க மீட்புப் படையினர் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

டோக்கியோவின் வடக்கே சுகியோனோ நகரத்திற்கும் யூசாவா நகரத்திற்கும் இடையிலான கான்-எட்சு என்ற அதிவேக நெடுஞ்சாலையிலேயே வாகனங்கள் இவ்வாறு சிக்கியுள்ளதாக கியோடோ செய்திச் ச‍ேவை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

புதன்கிழமை மலை தொடங்கிய இந்த பனிப் பொழிவானது மற்றொரு அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 200 வாகனங்களும் கடும் பனியில் சிக்கிக் கொண்டுள்ளன.

அது மாத்திரமன்றி  பனிப்பொழிவினால் சுமார் 10,000 வீடுகளுக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

புயலின் பெரும்பகுதி நைகாட்டா மற்றும் குன்மா மாகாணங்களை மையமாகக் கொண்டிருந்தது. இது மூன்று நாட்களில் சுமார் 2 மீட்டர் (6.6 அடி) பனிய‍ை பொழிந்துள்ளது.

ஜப்பானின் கிழக்கு, மத்திய மற்றும் கடலோரப் பகுதிகளில் அதிக பனிப் பொழிவு மன்றும் பனிச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அந் நாட்டு வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது.