எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனை எதிர்வரும்  8 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று (01) காலி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட  போது குறித்த உத்தரவினை நீதவான் நிலுபுலி லங்காபுர பிறப்பித்துள்ளார்.

சட்டவிரோத ஆயுத கொள்வனவு குற்றத்தின் கீழ் குறித்த எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டன் கடந்த மாதம் 23 ஆம் திகதி இரவு 8 மணியளவில் காலி துறைமுகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.