தொழில்நுட்ப வளர்ச்சியும் பிரசவ முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும்

Published By: Robert

02 Aug, 2016 | 10:39 AM
image

ஒரு பெண் திருமணமாகி கர்ப்பமுற்று ஒரு சிசுவைப் பெற்றெடுக்கும் போதுதான் அப்பெண் பிறந்ததன் பயனை பூர்த்தி செய்கிறாள். தற்போதைய நவீன உலகில் ஒரு பெண் பிறந்து வளர்ந்து வாழ்க்கைக் காலத்தை பூர்த்தி செய்து இவ்வுலகை நீத்து இறக்கும்வரை அவளின் வாழ்வின் ஒவ்வொரு படி நிலையிலும் நவீன தொழில் நுட்பம் ஆதிக்கம் செலுத்துகின்றது. அதாவது ஒரு குழந்தை பிறக்கும்போதிலிருந்து அது வளர்ந்து தனது கல்வி நடவடிக்கைகளை பூர்த்தி செய்து பின்னர் தனக்குரிய வாழ்க்கைத் துணையினை தேர்வு செய்யும் தருணத்திலும் பின்னர் தமது சந்ததியை பெற்றுக் கொள்ளும்போதும் இத் தொழில் நுட்பம் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றது.

இதேபோன்று இத் தொழில்நுட்ப வளர்ச்சியினால் தற்காலப் பெண்களின் கர்ப்ப காலப் பராமரிப்பிலும் அதன் பின் பிரவச முறையினிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இங்கு ஆராய்வோம்.

ஒரு கர்ப்பிணித் தாய் தனது வயிற்றிலுள்ள கருவை பெற்றெடுக்கும் முறை சாதாரண சுகப் பிரசவமா? அல்லது சிசேரியன் பிரசவமா? (சத்திர சிகிச்சை முறை) என்பது கர்ப்பமுற்றிருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் கணவனுக்கும் அவரது குடும்பத்தவருக்கும் பெரிய ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும்.

ஏனெனில் முன்னைய காலங்களில் பெண்கள் பிரசவம் என்றால் சாதாரண சுகப் பிரசவம் என்றுதான் கேள்விப்பட்டிருப்பார்கள். அதாவது முன்னைய காலங்களில் பிரசவம் என்பது வைத்தியசாலைகளில் மட்டுமின்றி வீடுகளிலும் கூட ஒரு பிரசவம் பார்க்கும் பெண்ணால் பார்க்கப்பட்டது. இதன் போது கூடுதலாக எவ்வித சிக்கலும் இல்லாது சுகப் பிரசவம் நடைபெற்று தாயும் சேயும் நலத்துடன் இருந்தார்கள்.

அக்காலத்தில் சிசேரியன் பிரசவம் என்ற கதைக்கே இடமில்லாது இருந்தது.

ஆனால் இன்றைய கால கட்டத்தில் பிரசவங்கள் வீடுகளில் நடைபெறுவதில்லை. பிரசவ வலி ஏற்பட்டதும் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கிறார்கள். பிரசவம் வைத்தியர்களின் கண்காணிப்பில் நடைபெறுகின்றது. இதில் சாதாரண சுகப் பிரசவமும் சிசேரியன் பிரசவமும் நடைபெறுகின்றன.

இக்காலத்தில் நடைபெறும் பிரசவங்களைப் பார்க்கும்போது எம்மனதில் எழும் முதல் கேள்வி முன்னைய காலத்தில் பலர் சாதாரண சுகப் பிரசவங்களை எவ்வித சிக்கலுமின்றி இலகுவில் மேற்கொண்டனர். அத்துடன் இவற்றில் பல வீடுகளிலேயே நடைபெற்றன. ஆனால் இன்று ஏன் அவ்வாறு முடிவதில்லை?

இன்று பிரசவம் என்றால் அவை வைத்தியசாலையிலேயே நடைபெறுகின்றன. அத்துடன் அவற்றில் பெரும்பாலானவை சிசேரியன் பிரசவங்களிலேயே முடிவடைகின்றன.

இந்த மாற்றத்திற்கான காரணங்களை ஆராய்வோமானால், இன்று இளம் பெண்களது வாழ்க்கை முறை முன்னைய காலங்களுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது. அதாவது அன்றைய காலத்தில் பெண்கள் தமது சகல வேலைகளையும் தாமாகவே செய்தனர். அவர்களது உடல் உழைப்பு அதிகமிருந்தது. இதனால் அன்றைய பெண்கள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் இருந்தனர். சமைத்தல், துணி துவைத்தல், கூட்டுதல், நடத்தல் என பல வேலைகளையும் தாமே செய்யும்போது அவர்கள் உடல் ஆரோக்கியம் திடகாத்திரமாக இருந்தது. இந்நிலை இப்போதைய பெண்களிடம் இல்லை. இன்றைய காலத்தில் பெண்களது சகல வேலைகளிலும் இயந்திரங்களும் நவீன கருவிகளும் பெரும்பங்கு வகிக்கின்றன. இதனால் பெண்களுக்கு தேவையான அன்றாட உடற்பயற்சிகள் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் உடல் திடகாத்திர நிலை குறைந்து சோம்பல் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் பிரசவ நேரத்தில் அவர்களது பிரசவ முறை மாற்றமடைய இவை பெரும்பங்கு வகிக்கின்றன.

தற்போதைய உணவு முறைகளும் முன்னைய உணவு முறைகளிலும் முற்றிலும் வேறுபட்டவை.

முன்னைய பெண்களது உணவுப் பழக்கங்கள் ஆரோக்கியமானவையாகக் காணப்பட்டன. உணவுப் பதார்த்தங்களும் இயற்கையானவையாகப் பெரும்பாலும் காணப்பட்டன.

தற்போதைய உணவு பழக்கம் பெண்கள் உடலில், அதிகளவு சீனிச்சத்து, மாச்சத்து, கொழுப்புச் சத்தை அதிகரிப்பனவாக காணப்படுகின்றன. அத்துடன் உடற்பயிற்சிகளும் குறைவாக உள்ள நிலையில் கூடுதலாக பெண்கள் கணனிகள் முன்னும் தொலைக்காட்சி முன்னும் கைத்தொலைபேசிகளுடனும் (Mobile Phones) தமது நேரத்தை செலவழிப்பதுடன் இவ்வாறான உணவுப் பழக்கங்களையும் கடைப்பிடிக்கும்போது அவர்களது உடல் நிறை அதிகரிப்பதுடன் ஆரோக்கிய சுறுசுறுப்பு தன்மை குறைவடைகின்றது. இந்நிலையில் இன்றைய பெண்கள் பலர் சாதாரண சுகப் பிரசவத்தை மேற்கொள்ள முடியாது திணறுகிறார்கள். இவ்வாறு சுகப் பிரசவம் இயலாது போகின்றபோது பிரசவ அறையில் பெண்கள் தொடர்ந்து தம்மால் சாதாரண பிரசவத்தை முயற்சிக்க முடியாதுள்ளது சிசேரியன் செய்து விடுங்கள் என மன்றாடும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

இவ்வாறு சுகப் பிரசவத்திற்கு கஷ்டப்பட்டு தாமாகவே கேட்டு சிசேரியன் பிரசவம் மேற்கொண்டால் கூட, கூட இருப்பவர்களும் உறவினர்களும் வைத்தியசாலைகளில் இப்போதெல்லாம் எடுத்தவுடன் சிசேரியன் செய்து விடுகின்றனர் என பேசிக் கொள்வதே வழமையாகி விட்டது.

மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சி சிசேரியன் பிரசவம் அதிகரிக்க காரணமாகிவிட்டதா?

மருத்துவத்துறை தற்போது மிகவும் முன்னேறிவிட்டது. நவீன தொழில் நுட்ப வளர்ச்சி மூலம் ஸ்கான் (Scan) பரிசோதனைகள், சிசுவின் இருதய துடிப்பை கண்டறியும் கருவிகளின் வருகை, சிசுவின் அங்க வளர்ச்சிகளை துல்லியமாக அறிந்து கொள்ளும் ஸ்கான் பரிசோதனை (4D, 5D Scan) போன்றவற்றின் மூலம் தற்காலத்தில் சிசு வளர்ச்சி, சிசு ஆரோக்கியம் குறித்து துல்லியமாக முன்கூட்டியே அறியக் கூடியதாகவுள்ளது. இதனால் சிசுவிற்கு ஏதும் ஆபத்துகள் ஏற்படுமா? என முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இதனால் சிசுக்கள் ஆரோக்கியம் குறைந்து துடிப்புகள் நின்று போவதற்கு முன்னரே குழந்தைகளை காப்பாற்ற சிசேரியன் பிரசவ மூலம் அவற்றை வெளியே கொண்டு வருகிறோம்.

இவ்வாறான வசதிகள் முன்னைய காலங்களில் இல்லாமையால் அன்று சிசுக்களின் ஆரோக்கியம் சரியாக அறியப்படாமல் சிசேரியனும் செய்யப்படாமலும் குழந்தைகள் சில பல ஆரோக்கியக் குறைகளுடன் பிறந்து கஷ்டப்பட்டமை மருத்துவ வரலாற்றில் உள்ள

சிசேரியன் முறையில் ஏற்பட்ட மாற்றம்

இன்றைய கால கட்டத்தில் சிசேரியன் பிரசவமானது முற்றிலும் இலகுவானதும் ஆபத்துகள் இல்லாததுமான ஒரு சத்திர சிகிச்சையாக உள்ளது.

இதற்கான மயக்கமும் பெண்ணை முழுதாக மயக்காமல் உடலின் கீழ்ப்பகுதியை மட்டும் விறைக்கப்பண்ணி சிசேரியன் செய்யப்படுவதால் ஆபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளன.

கடந்த 50 வருடங்களுக்கு முன் பார்த்தால் சிசேரியன் என்றால் அது ஒரு பெரிய சத்திர சிகிச்சையாகவும் முழுதாக பெண்ணை மயக்கி செய்ய வேண்டியதாகவும் ஆபத்துகள் நிறைந்த ஒரு பிரசவ முறையாகவும் இருந்தது. இதனால் பலரும் சிசேரியன் என்ற வார்த்தையை கேட்டு பயந்தனர்.

இன்று ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றத்தால் இது ஒரு சுமையான மாற்று வழியாகவும் பிரசவ முறையாகவும் காணப்படுகின்றது.

எனவே பெண்கள் தமது உடற்பயிற்சி, உணவுப் பழக்கங்களில் கவனஞ் செலுத்தி பிரசவ நேர சிக்கல்களை தவிர்ப்பதுடன் தமது வைத்திய நிபுணரின் ஆலோசனையுடன் பிரசவ முறைகளை தேர்வு செய்வது சிறந்தது. எந்த முறை பிரசவமானாலும் அதன் பின்னர் தாயும் குழந்தையும் எவ்வித ஆரோக்கிய சிக்கல்களும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையும் ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04