செல்வாக்கின் கீழ் வாகனம் செலுத்துபவர்கள் உட்பட மோட்டார் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் அனைத்து வாகன சாரதிகளை கண்டறிய இன்றிரவு முதல் சிறப்பு நடவடிக்கை தொடங்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு அடையாளம் காணப்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

பல்வேறு ஒளி மற்றும் ஒலி வடிவங்களுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

இத‍ேவேளை வீதி விபத்துக்கள் காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 10 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறான வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கு சாரதிகளும் பாதசாரிகளும் அவசியம் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் அஜித் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார்.