வவுனியா இலுப்பையடிப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த நபர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் ஹெரோயின் விற்பனை இடம்பெற்று வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கிற்கமைய, ஹெரோயினை கொள்வனவு செய்வதற்காக பொலிசாரால் திட்டமிடப்பட்டு  நபர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பொலிசாரால் அனுப்பப்பட்ட நபர் போதைப்பொருளை கொள்வனவு செய்ததுடன் விற்பனை செய்த நபரை பொலிசாரிடம் அடையாளப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் பொலிசார் குறித்த நபரை கைதுசெய்ய முனைந்துள்ளனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்தது.

ஹெரோயினை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும்  நபர் தான் ஐயப்பன் விரதம் அனுஸ்டித்து வருவதாகவும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடவில்லை என்றும் தன்னை கைதுசெய்ய வேண்டாம் என்றும் பொலிசாரிடம் கெஞ்சியுள்ளார். 

இதனால் குறித்த பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடியதுடன்,  குழப்பமான நிலையும் ஏற்ப்பட்டிருந்தது. பின்னர் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதேவேளை கைது செய்யப்பட நபரிடம் மேலும் போதைப்பொருள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வவுனியா சதோசவிற்கு பின்பான பகுதியில் பொலிசாரால் தேடுதல் நடாத்தப்பட்டு வருகின்றது.