டெங்கு பரவும் வகையில் சுற்­றுப்­புறச் சூழலை வைத்­தி­ருந்த 1113 பேருக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கவும் மேலும் 267 பேருக்­கெ­தி­ராக வழக்குத் தொடர்­வ­தற்கும் சுகா­தார போஷாக்கு மற்றும் சுதேச வைத்­தி­யத்­துறை அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

மேல் மாகா­ணத்­தி­லேயே டெங்கு நோயின் தாக்கம் அதி­க­ளவில் உண­ரப்­பட்­டுள்­ளது. எனவே அம்­மா­கா­ணத்தில் டெங்கு நோயினை ஒழிக்கும் வேலைத்­திட்­டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு ஈடு­பட்­டுள்­ளது.

குறித்த வேலைத்­திட்டம் கடந்த29 ஆம் திகதி ஆரம்­பிக்­க­ப்பட்டு நேற்­று­டன்­ நி­றை­வுக்கு வந்­தது.

எனவே கடந்த 29 ஆம் திகதி மாத்­திரம் கொழும்பு, களுத்­துறை, கம்­பஹா ஆகிய மாவட்­டங்­க­ளி­லுள்ள 22140 பேருக்கு சொந்­த­மான குடி­யி­ருப்பு பிர­தே­சங்­களில் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

அதன்­போதே மேற்­கு­றித்த டெங்கு பரவும் வாய்ப்­புள்ள பிர­தே­சங்கள் இனம் காணப்­பட்­டுள்­ளன.

ஆகவே டெங்கு பர­வக்­கூ­டிய வகையில் சுற்­றுப்­பு­றச்­சூ­ழலை வைத்­தி­ருந்த 1113 பேருக்கு எச்­ச­ரிக்கை விடுக்­க­வுள்­ள­துடன் மேலும் 267 பேருக்கு எதி­ராக வழக்குத் தொடர்­வ­தற்கும் சுகா­தாரப் போஷாக்கு மற்றும் சுதேச வைத்­தியத் துறை அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. சுகா­தார அமைச்சு டெங்கு பர­வு­வ­தற்­கெ­தி­ராக மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கை­க­ளினால் டெங்கு நோயா­ளி­களின் எண்­ணிக்கை குறை­வ­டைந்­துள்­ளது.

இருந்­த­போ­திலும் டெங்கு நோயா­ளர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்கு அர­சாங்கம் ஏரா­ள­மான நிதியினை செலவிடுகிறது.

ஆகவே குடியிருப்பாளர்கள் தமது சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு அவ்வமைச்சு மக்களை வேண்டியுள்ளது.