(செ.தேன்மொழி)
பொது போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பஸ்களில் இருக்கையின் எண்ணிக்கையை விட அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் பொது போக்குவரத்து சாதனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்தார்.
அது தொடர்பில் கவனம் செலுத்திய பொலிஸ் மா அதிபர் சீ்.டீ.விக்ரமரத்ன அது தொடர்பான சுற்றுநிரூபத்தை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ளார்.
இதேவேளை சுகாதார அமைச்சரினால் கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் பொது வாகனங்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அல்லது உரிய அதிகாரிகளே தீர்மானிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அது தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருந்ததுடன், அதில் பொது போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் பேரூந்துகளில் இருக்கையின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் ஏற்றமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் , இந்த உத்தரவுக்கு புறம்பாக செயற்படும் பேரூந்துகளில் சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்களுக்கு எதிராக தண்டனை சட்டக்கோவை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதுகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM