பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

"குடியரசுத் தலைவர் இன்று கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது,"  "முதல் அறிகுறிகளின் தொடக்கத்தில் செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையைத் தொடர்ந்து இந்த தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக." எலிசி அரண்மனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 42 வயதான இம்மானுவேல் மக்ரோன்  ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்படடுள்ளது.

மக்ரோன் தனது ஜனாதிபதிக்குரிய கடமைகளை தனிமைப்படுத்தலில் இருந்தவாறு மேற்கொள்வார் என்று உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்களை கட்டுப்படுத்த  இந்த வாரம் ஒரே இரவில் ஊரடங்கு உத்தரவை விதித்தது.

ஜோ்ன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நாட்டில் 20 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 59,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மக்ரோன் எவ்வாறு வைரஸைப் பிடித்தார் என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் அவரது அலுவலகம், அவர் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பதாகக் கூறியது.