(க.பிரசன்னா)

தேசிய டிப்ளோமா, கற்பித்தல் டிப்ளோமா வைத்திருப்பவர்களை இலங்கை ஆசிரியர் சேவையில் சேர்ப்பது - 2020 (2016 - 2019) தொடர்பிலான தகவல்கள் இணையவழி மூலமாக கோரப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் https;//ncoe.moe.gov.lk  என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தகவல்களை சமர்ப்பிக்க முடியும்.

தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்காக இணையவழி மூலமாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறைக்கு அமைவாகவே தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைவாக தகவல்களை வழங்குவதற்கான கால எல்லை டிசம்பர் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.