நைஜீரியாவில் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து 300 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டமைக்கு போகோ ஹராம் அமைப்பு  உரிமைக்கோரியுள்ளது.

போகோ ஹராம்  அமைப்பு  சிபோக் பிராந்தியத்தில் 2014 இல் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவிகளைக் கடத்தியுள்ளது.

நைஜீரியாவின் வட பகுதியிலுள்ள கட்சினா மாநிலத்திலுள்ள உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

போகோ ஹராம் ஆயுதக் குழுவால் கடத்தப்பட்ட 17 மாணவர்கள்  மீட்கப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த மீட்பு நடவடிக்கையில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கட்சினா மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கட்சினா மாநிலங்களிலுள்ள பாடசாலைகள் மூடப்படட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பஷீர் சாலிஹி மகாஷி இப்பகுதிக்கு விஜயம் செய்து ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடம்  மாணவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

காணாமல் போன மாணவர்களின் எண்ணிக்கையும் தெளிவாக இல்லை - 320 அல்லது 333, அதிகாரிகளின் இரண்டு கணக்குகளின்படி, கங்காராவில் வசிப்பவர்கள் 500 க்கும் அதிகமானவர்கள் என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.