நாட்டில் தற்பொழுது நிலவும் கொவிட்-19 நிலைமைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால தீர்மானங்கள் 22 ஆம், 23 ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என்று கொவிட்- 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைக்கு அமைவாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அல்லது தனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என அவர் கூறினார்.

எனினும் எதிர்வரும் 22ஆம், 23 ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள கொவிட் நிலைமைக்கு அமைவாக தீர்மானங்கள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.