கொவிட்-19 பரவல் காரணமாக அவுஸ்திரேலிய பகிரங்க (ஓபன்) டென்னிஸ் தொடரானது ஒரு மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரை எதிர்வரும் ஜனவரி 18-31 வரை மெல்போர்னில் நடத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் காரணமாக தொடரை 2021 பெப்ரவரி 08 - 28 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா நெருக்கடி காரணமாக தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும், அவுஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். 

இதனிடையே அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜனவரி 10 - 13 ஆம் திகதி வரை கட்டார் தலைநகர் தோஹாவில் நடைபெறும்.