அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 

ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி  இருபதுக்கு : 20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

அடுத்ததாக பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்துக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. 

அதன்படி இந்தியா - அஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக இன்று அடிலெய்டில் ஆரம்பமானது.  

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆரம்ப பீரர்களாக களமிறங்கிய ப்ரித்வி ஷா ஓட்டம் எதுவும் எடுக்காமலும், அகர்வால் 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.

சற்று முன்னர் வரை இந்திய அணி 25 ஓவர்களின் நிறைவில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்திய அணித் தலைவர் விராட் கோலி, தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் முதல் போட்டியுடன் தாயகம் திரும்புகிறார். அதன் பிறகு எஞ்சிய 3 போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார். 

எனவே இந்த டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக தொடங்குவதில் அவர் வரிந்து கட்டுவார்.