(எம்.எப்.எம்.பஸீர்)
மஹர சிறைச்சாலை கலவரத்தின் போது கைதிகள் நால்வர் துப்பாக்கிச் சூட்டிலேயே உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த கலவரத்தில் உயிரிழந்த 11 கைதிகளில், இதுவரை நான்கு கைதிகள் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. அதன் அறிக்கை நேற்று வத்தளை நீதிவான் புத்திக ஸ்ரீ ராகலவுக்கு இரகசியமாக சிறப்பு நிபுணர் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வறிக்கை பிரகாரம் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானமையே இவர்களது மரணத்திற்கான அடிப்படை காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல அறிவித்தார்.
எவ்வாறாயினும் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவர நிலைமையின் போது உயிரிழந்த நான்கு கைதிகளின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி கோரி அவர்களது உறவினர்கள் விடுத்த கோரிக்கையை வத்தளை நீதவான் புத்திக ஶ்ரீ ராகல நிராகரித்ததுடன், கைதிகளின் உடல்களை உடனடியாக தகனம் செய்யுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.
அதன் பின்னர் வழக்கின் மேலதிக விசாரணையை 18 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான் ஏனைய ஏழு கைதிகளினதும் பிரேத பரிசோனை அறிக்கைகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளின் போது 11 கைதிகள் உயிரிழந்ததுடன், அவர்களில் 08 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM