அமெரிக்காவின் மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் (எம்.சி.சி) இலங்கையுடனான 480 மில்லியன் டொருக்கான அமெரிக்க ஒப்பந்தம் அற்றுப் போயுள்ளது.

அதன்படி இந்த ஒப்பந்தத்தின் கீழ் பயன்பெரும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

எம்.சி.சி நிர்வாகம் டிசம்பர் 15 ஆம் திகதி தனது கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளது. 

கடந்த நல்லாட்சி அரசாங்கம் 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக எம்.சி.சி-க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. எவ்வாறாயினும், தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட புதிய அரசாங்கம், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிறுத்த முடிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,