வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 6 விடயங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் ஆலோசனை

Published By: Digital Desk 4

16 Dec, 2020 | 10:55 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிநாட்டுகளிலிருந்து நாடு திரும்புபவர்களின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடர்பாக சுகாதார அமைச்சினால் 06 விடயங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

தீபாவளியை எவ்வாறு கொண்டாட வேண்டும் : சுகாதார அமைச்சு தெரிவிப்பது என்ன ? |  Virakesari.lk

அதற்கமைய வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்றவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்றவர்கள் பின்பற்றிய வேண்டிய சுகாதார வழிகாட்டல்களாக கூறப்பட்டுள்ளதாவது :

வெளிநாடுகளிலுள்ளவர்கள் நாட்டிற்குள் வந்த பின்னர் முதல் நாளில் அடிப்படை பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அரசாங்க சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்திற்குள், அவர்கள் தனி அறையில் அல்லது இரண்டு பேர் சேர்ந்த அறையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்த அறையில் தனியான இயற்கை கழிவறை வசதிகள் இருக்க வேண்டும் என்பதுடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நபர்களுடன் இணைந்து பயன்படுத்தக்கூடாது.

தனிமைப்படுத்தல் காலத்திற்குள் எந்த வகையிலும் தனிமைப்பட்டுள்ள ஏனையவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் 12 – 14 ஆவது நாட்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படுகின்ற பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாவதுடன், அதன் முடிவுகள் எதிர்மறையாக (Nagative) இருக்க வேண்டும்.

14 நாட்கள் தனிமைப்படுத்தல் கால முடிவின் போது அந்த நிலையத்தின் பொறுப்பாளர் மற்றும் பிரதேச சுகாதார அதிகாரி குறித்த நபரின் தனிமைப்படுத்தல் செயல்முறையில் திருப்தி அடைய வேண்டும்.

மேலும் குறிப்பிட்ட அடிப்படை விடயங்களையும் முழுமையாக பூர்த்தி செய்த நபர், மீண்டும் தமது வீட்டில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தேவையில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறப்பனையில் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-27 09:20:40
news-image

யாழ். பொலிகண்டி பகுதியில் 38 கஞ்சா...

2025-03-27 09:41:50
news-image

குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட...

2025-03-27 09:18:09
news-image

இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் வாகன...

2025-03-27 09:21:52
news-image

88 வயதில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்...

2025-03-27 09:11:56
news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53