கூட்டு எதிர்க்கட்சி என்ற பேரில் திருடர்களே பாதயாத்திரை செய்கின்றனர். இதில் கொலைக்காரர்களும் திருடர்களும் பெண் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புப்பட்டவர்களும் என பலர் உள்ளனர். அவர்கள் பேரணியை கண்டு மக்களும் அச்சத்தில் உள்ளனர் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

 அதேபோல் எதிர்க்கட்சி என்றால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்ப்பதில் தவறல்ல. ஆனால் மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்க வேண்டும்.  அவ்வாறாயின் அது சிறந்த எதிர்க்கட்சியல்ல. இவர்களுக்கு ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஒரு வருடம் கூட பொறுமை காக்க முடியவில்லை.

 கூட்டு எதிர்க்கட்சி என்ற  பேரில் பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் இல்லாத ஒரு தரப்பினை நாம் கூட்டு எதிர்க் கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது.