(செ.தேன்மொழி)
மொரவெவ பகுதியில் மிருக வேட்டைக்காக இணைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமான  மின் இணைப்பில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்குளம் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவிலேயே குறித்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது வயல் வேலைக்காக வந்திருந்த இளைஞனே, மிருக வேட்டைக்காக சட்டவிரோதமான முறையில் இணைக்கப்பட்டிருந்த இந்த மின் இணைப்பில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கந்துருவெல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.