மஸ்கெலியா பொது சகாதார பிரிவுக்குட்பட்ட சாமிமலை மல்லியப்பு பகுதியில் இன்று 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரி நரேந்திரகுமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் சாமிமலை மல்லியப்பு தோட்டத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரும், 50 வயதுடை ஆண் ஒருவரும் ஆவார். 

இவருடைய இல்லத்திற்கு 16 ஆம் திகதி கொழும்பு வத்தளையிலிருந்து சென்ற பெண் கொரோனா தொற்றாளி  ஒருவர் அவர்களது வீட்டில்  தங்கியதை தொடர்ந்து அத்தொற்றாளியை ஹம்பந்தோட்டைக்கு கொண்டு செல்லபட்டதை தொடர்ந்து குறித்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களின் பி.சி.ஆர் பரிசோதனையின் படி இணங்காணப்பட்ட இரு தொற்றாளிகளுடன் மேலும்  54 வயதுடை ஒரு தொற்றாளி  சாமிமலை பெயர்லோன் தோட்டத்தில் இணங்காணப்பட்டதுடன் குறித்த மூவரையும் ஹம்பந்தோட்டையிலுள்ள நிரோதாயினா மத்தியஸ்தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டவுள்ளதாக அவர் மேலும்  தெரிவித்தார்.