•உலகளாவிய தொற்று நிலைமைக்கு மத்தியிலும் இலங்கை செலுத்த வேண்டிய கடன் தவணை எவ்வித நிலுவையும் இன்றி செலுத்தப்பட்டுள்ளது...
•அரச மற்றும் தனியார் துறையினரின் தலையீட்டுடன் இந்நாட்டின் ஏற்றுமதி வருவாயை அதிகரித்தோம்...
•முழு நாடும் உள்ளடங்கும் வகையில் இணைய தொடர்பாடல் வசதியை பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்வோம்...
உலகளாவிய கொவிட்-19 பேரழிவு காரணமாக கடன் வழங்கும் நாடுகள் கூட ஒரு கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், அரச மற்றும் தனியார் துறையின் தலையீட்டுடன் இந்நாட்டின் ஏற்றுமதி வருவாயில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு முடிந்துள்ளது என்று பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
குளியாபிட்டிய வடமேற்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நேற்று (15.12.2020) இடம்பெற்ற 'கிராமத்துடன் கலந்துரையால் ஊடாக வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' தேசிய வேலைத்திட்டத்தின் வடமேல் மாகாண குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், முழு நாடும் உள்ளடங்கும் வகையில் இணைய தொடர்பாடல் வசதியை பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை நிலையாக பேணுவதற்கு அந்நிய செலாவணியை முறையாக நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள், உலகளாவிய தொற்று நிலைமைக்கு மத்தியிலும் இலங்கை செலுத்த வேண்டிய கடன் தவணையை எவ்வித நிலுவையும் இன்றி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஆண்டில் இலங்கையை அனைத்து துறைகளிலும் முன்னேற்றும் பாரிய எழுச்சிக்கு 'கிராமத்துடன் கலந்துரையால் ஊடாக வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' வேலைத்திட்டத்துடன் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் ஒன்றிணையுமாறு திரு.பசில் ராஜபக்ஷ குறித்த கலந்துரையாடலின் போது வடமேல் மாகாண அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
2015ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷவினது அரசாங்கம் மாறியதை தொடர்ந்து புதிய அரசியல் கலாசாரமொன்றை ஏற்படுத்துவதற்கு பல்வேறு துறையினரை தொடர்புபடுத்தி வியத் மக திட்டத்தின் ஊடாக நாட்டின் எதிர்கால பயணம் குறித்து திட்டமிடுவதற்கு தற்போதைய ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டார். அதற்கமைய நாம் கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தை செயற்படுத்தி அதன் மூலம் பொதுமக்களின் கருத்து பெறப்பட்டது. எனினும் அதன்போது அரச அதிகாரிகளின் கருத்துக்களை பெற முடியாது போனது.
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர், இராஜாங்க அமைச்சுக்களின் சகல அதிகாரிகள் மற்றும் அந்தந்த துறைகளுக்கு பொறுப்பான குழுக்களுடன் கலந்துரையாடி அனைத்து துறைகளிலும் கருத்துக்கள் பெறப்பட்டன. முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் பொதுமக்களின் பங்களிப்புடன் முழுமையாக செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கிறோம்.
உலக நிதி தரநிலைப்படுத்தல் நிறுவனங்கள் யாவும் எம்மை திவாலான அரசாங்கமாக பெயரிடுவதற்கு காத்திருந்த சந்தர்ப்பத்தில் நாம் எவ்வித நிலுவையும் இன்றி கடனை செலுத்தினோம். அந்நிய செலாவணி கிடைக்கும் பல வழிமுறைகள் காணப்படுகின்றன. கொவிட்-19 தொற்று பரவலுடன் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தரவில்லை. கொவிட்-19 காரணமாக ஏற்றுமதி மூலம் பெற்ற வருவாய் குறைந்த போதிலும் அரச மற்றும் தனியார் துறையின் தலையீட்டுடன் அதனை மேலும் முன்னேற்ற முடியுமானதாயிற்று.
அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 2021 வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏதேனும் கோரிக்கைகள் வைக்கப்பட்டால், அது குறித்து பரிசீலிக்கப்படும். எதிர்காலத்தில் நாம் பிரதேச அபிவிருத்தி குழுக்கள் அனைத்தையும் 21-22 ஆகிய இரு தினங்களில் கூட்டவுள்ளோம்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் கிராமப்புற துறை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் கல்வி சீர்திருத்தங்களுக்காக பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடசாலைகளிலும், குடிநீர், சுகாதார நடவடிக்கைகளை ஏற்படுத்துவதற்கு இக்குழுக் கூட்டங்களில் தீர்மானிக்க முடியும். தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நம் நாட்டை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கிறோம்.
மேலும், சுற்றாடலை பாதுகாப்பதன் ஊடாக பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்த முடியும். நீர் திட்டங்களை செயல்படுத்துவதில் நீர் ஆதாரங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் உள்ளன. எவ்வாறாயினும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. வடக்கின் அபிவிருத்திக்காக இரணைமடு நீர்த்தேக்க திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த அரசாங்கம் அதை இடைநடுவே நிறுத்தியது. இதற்கு பாரிய நிதி செலவிடப்பட்டதுடன் பராமரிப்புக்கும் நிறைய செலவாகிறது. அதன்படி, ஒரு நீர்ப்பாசனத் திட்டம் தொடங்கப்பட்டால், அதில் ஒரு பகுதியை குடிப்பதற்காக வழங்க வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அவ்வாறான இடங்களில் பாலம் அமைப்பதற்கு இடமளிக்கப்படாது.
அனைவரும் நாட்டிற்காகவே சேவையாற்றுகின்றோம். கொவிட் முதலாவது சுற்றின்போது அனைத்து சுமைகளையும் ஏற்று ஜனாதிபதி செயலணிக்கு அரச அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்கினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM