மஹர சிறைச்சாலையில்அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த 11 கைதிகளில் நால்வரின் சடலங்களை தகனம் செய்ய வத்தளை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
நவம்பர் 29 ஆம் திகதி மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை இன்று வத்தளை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் உயிரிழந்த கைதிகளில் நால்வர் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகி உயிரிழந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில் பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்ட நான்கு கைதிகளின் சடலங்களை இறுதி கிரியை மேற்கொள்வதற்காக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உயிரிழந்த கைதிகள் தரப்பு சட்டத்தரணிகள் கோரினர்.
எனினும் இதற்கு சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான, சட்ட மா அதிபரின் இணைப்பாளர் நிஷாரா ஜெயரத்ன எதிர்ப்பை வெளியிட்டார்.
அவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதானது, சமுகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
அதன் பின்னர் இரு தரப்பு விவாதங்களையும் ஆராய்ந்த வத்தளை நீதிவான் நீதிமன்ற நீதிபதி, சம்பவத்தில் உயிரிழந்த நான்கு சிறைக் கைதிகளின் சடலங்களை அரசாங்கத்தின் செலவிலும், கண்காணிப்பிலும் தகனம் செய்ப்படும் என்று கூறி உத்தரவு பிறப்பித்தார்.
குறித்த சடலங்களை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM