ஸ்பெய்னில் கொரோனா தொற்றுக்குள்ளான 104 வயது மூதாட்டியொருவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

மாட்ரிட்டில் உள்ள வைத்தியசாலையொன்றிலிருந்து பூரண குணமடைந்த நிலையில் நல்ல ஆரோக்கியத்துடன் எலெனா என்ற மூதாட்டி வெளியேறியபோது மருத்துவ ஊழியர்களை அவரை கைதட்டி பாராட்டி வழி அனுப்பி வைத்தனர்.

எலெனா 14 நாட்கள் 'Gregorio Maranon' மருத்துவமனையில் கொவிட் -19 விடுதியில் இருந்த நிலையிலேயே குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த வைத்தியசாலையில் குணமடைந்த நிலையில் வெளியேற்றப்பட்ட 4,149 ஆவது கொரோனா நோயாளர் இவர் ஆவார்.