முல்லைத்தீவு மக்களை பட்டினிச்சாவுக்குள் தள்ளும் அரசாங்கம் - ரவிகரன்

Published By: J.G.Stephan

16 Dec, 2020 | 12:25 PM
image

இலங்கை அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களையும் பட்டினிச் சாவு நெருக்கடிக்குள் தள்ளுவதாகவே அமைந்துள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி (எல்), வனஜீவராசி, வனவளத்திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என்பன தமிழ் மக்களின் வாழ்வாதாரக் காணிகளையும், வளமான பகுதிகளையும் அபகரித்து தமிழ் மக்களின் வழ்வாதாரத்தினை சூறையாடியுள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழ் மக்களின் கடல் வளமும் வேற்று நாட்டவரால் சிதைக்கப்படுகின்றது. இதையும் அமைதியா இருந்து வேடிக்கை பார்கின்றார்கள். இது எமது மக்களை பட்டினிச்சாவு நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடாகவே தாம் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில், இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், இதனைவிட மகாவலி (எல்) என்ற போர்வையில் இங்கு காணிகள் அபகரிக்கப்படுகின்றன. எனினும் மகாவலி நீர் இங்கு கொண்டுவரப்படவில்லை. வன இலாக என்ற பெயருடன் எங்களுடைய காடுகள் அபகரிக்கப்படுகின்றன. 

இதேவேளை எமது மாவட்டத்திலுள்ள தமிழர்களின் பூர்வீக இடங்கள், அப்பூர்வீக இடங்களிலுள்ள வரலாற்றுத் தொன்மைமிக்க கல்வெட்டுக்கள், கற்பொழிவுகள் கட்டடச் சிதைவுகளை தொல்லியல் திணைக்களத்தினர் தொல்லியல்சார் இடங்களென அபகரிப்பதுடன் பௌத்த மதத் திணிப்பினை மேற்கொள்கின்றனர்.

இவை அனைத்தையும் அபகரித்தது போதாதெனத் தற்போது எங்களுடைய கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை தடுக்கின்ற செயற்பாட்டை செய்வதற்கு கடற்படையினரோ உரியவர்களோ தயங்குகின்றனர். அதன் மூலம் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தினை அழிக்கின்றார்கள்.

இதே நிலை தென்னிலங்கையில் காணப்பட்டால், அங்குள்ள கடற்பரப்புக்களிலே இவ்வாறு வேற்று நாட்டு மீனவர்கள் வருகைதந்து மீன்பிடியில் ஈடுபட்டால் இலங்கை அரசும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும், கடற்படையினரும் இவ்வாறுதான் வேடிக்கை பார்ப்பார்களா? நிச்சயமாக அவ்வாறான நிலை காணப்படாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு நாட்டின்...

2024-03-28 14:20:44
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59