நெதர்லாந்தில் ஐந்து வாரங்களுக்கு கடுமையான ஊரடங்குக்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

தொற்றுநோய்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து பண்டிகை காலங்களில் கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்தப்போவதாக ஐரோப்பிய நாடுகளில் 2 ஆவதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது. இந்நிலையில், முதன் முதலில் ஜேர்மனி இதே போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

நெதர்லாந்தில் உள்ளவர்கள் வீட்டிலே இருக்க வேண்டும், வேலைக்குச் செல்லக் கூடாது, மற்றவர்களுடன் முடிந்தவரை தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகல்நேர பராமரிப்பு நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள், சினிமா திரையரங்குகள், சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் உட்பட அனைத்து பொது இடங்களும் ஜனவரி 19 ஆம் திகதி வரை மூடப்படுகிறது.

இதேவேளை, பல்பொருள் அங்காடிகள் மற்றும் வங்கிகள் திறந்த நிலையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் அனைத்தும் ஜனவரி 18 ஆம் திகதி வரை மூடப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, நாடு உறுதிப்படுத்தப்பட்ட 10,000 கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைப் பதிவுசெய்ததுள்ளது. இது ஆறு வாரங்களுக்கு பின்னர் அதன் மிகப்பெரிய நாளாந்த உயர்வாக அங்கு பதிவாகியுள்ளது.

புனித நிக்கோலஸின் பிறந்தநாளைக் குறிக்கும் டிசம்பர் 5 பரிசு வழங்கும் கொண்டாட்டங்களுக்குப் பிறகு, மேலும் 8,500 கொரோனா தொற்றாளர்கள் திங்களன்று பதிவாகியுள்ளனர்.

மொத்தத்தில், தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து நாடு  600,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 10,000 உயிரிழப்புகளையும் பதிவு செய்துள்ளது.