திருகோணமலை, பன்குளம் பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் கிருஷாந்தன் (25 வயது) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்  பன்குளம் ஆறாம் வாய்க்கால் பகுதியில் அவரின் தாயின் தங்கையின் (சித்தி) வீட்டில் வேலைக்காக சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.