புதிய உருமாற்றமடைந்த கொரோனா கண்டுபிடிப்பு ; லண்டனில் முடக்கம்

Published By: Digital Desk 3

16 Dec, 2020 | 12:06 PM
image

லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபட்ட வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதால் அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்நலையில் அங்கு நாட்டை முடக்கும் நிலைக்கு அந்நாட்டு அரசாங்கம் இறங்கியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வைரசின் பரவல் வேகமாக அதிகரித்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே தலைநகர் லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு மற்றும் வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். லண்டனில் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மெட் ஹன்ஹாக் கூறுகையில்,

லண்டன், ஹெர்ட்போர்ட்ஷையர், எசெக்ஸ் மற்றும் சில பகுதிகள் இன்று புதன்கிழமை முதல் மிக உயர்ந்த அளவிலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும்.

மேலும் அவர் கூறும் போது,  இங்கிலாந்தில் உலகத்தரம் வாய்ந்த மரபணு திறமைகள் இருக்கின்றன. அதற்கு நன்றி, கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் வேகமாக பரவுகிறது.

தற்போதைக்கு, இது ஒரு மோசமான நோய் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை. கொரோனா தடுப்பூசிகளால் புதிய மாறுபாட்டிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இருந்தாலும் கூட, புதிய மாறுபாடு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த உருமாற்றம் தற்போதுள்ள வகைகளை விட வேகமாக வளர்ந்து வருவதாக ஆரம்ப ஆய்வு  தெரிவிக்கிறது.

புதிய உருமாற்றம் குறித்து இங்கிலாந்து ஏற்கனவே உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அறிவித்துள்ளது. மேலும் விஞ்ஞானிகள் புதிய உருமாற்றத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

திரைஅரங்குகள்  வர்த்தக நிலையங்கள் என்பன மூடப்படும் என்றும் பொது இடங்களில் 6 பேருக்கு மேல் ஒன்றாக கூட தடை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் தெற்கு இங்கிலாந்தில் வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்க கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே மக்களை பாதுகாக்கவும், அதிக அளவு பாதிப்புகளை குறைக்கவும் முடியும் என்பதால் இந்த கட்டுப்பாடுகள்  மிகவும் அவசியமானது என கருதுவதா சுகாதாரத்துறை அமைச்சர் மெட் ஹன்ஹாக் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52