முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தற்போது ஓய்வூதியத்தை பெற்று நிம்மதியாக வாழக்கூடிய காலம் இதுவாகும். இதனை விடுத்து இனவாதத்தை தூண்டி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற நினைப்பதிலோ அல்லது அரசாங்கத்தை கவிழ்க்க நினைப்பதோ மிகவும் வருந்ததக்க விடயமாகும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்தார்.

மேலும் பாதயாத்திரை மூலம் எவ்விதமான பலனும் கிடைக்க போவதில்லை என அவர்கள் அறிந்தும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புக்களுக்காக கட்சியை பிளவுப்படுத்த எத்தணிக்க வேண்டாம் எனவும் மகிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகொள் விடுக்கின்றோம் என்றார்.

நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.